Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Advertiesment
rahman
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (21:00 IST)
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் காண மொத்தம் 41 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் டிக்கெட் வாங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'மறக்குமா நெஞ்சம்' என்ற  இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல், சரியான ஒருங்கிணைப்பு இன்மை ஆகியவற்றால பலரும் பாதிக்கப்பட்டதால், ஏ.ஆ.ரஹ்மான் இதற்கு வருத்தம் தெரிவித்து, நிகழ்ச்சியில் பணம் செலுத்தி, பங்கேற்க முடியாதவவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என்று அறிவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை 7 ஆயிரம் டிக்கெட் ஸ்கேன் செய்து, 3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகள் பரிசீலித்து 1000 பேருக்கு பணம் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இது முற்றியும் பொய்யான தகவல்''- நடிகை நித்யாமேனன் விளக்கம்