Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக் பாஸ் 3 -ல் கலந்துக்கொள்ள எனக்கு தகுதி இல்லயாம்! புலம்பிய நடிகை!

பிக் பாஸ் 3 -ல் கலந்துக்கொள்ள எனக்கு தகுதி இல்லயாம்! புலம்பிய நடிகை!
, வியாழன், 30 மே 2019 (13:03 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 
இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்தவகையில் ஒருசில சினிமா பிரபலங்களை குறிப்பு இவர்களெல்லாம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டுவந்தது. 
 
இந்நிலையில் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகீங்களா என்று கேள்வி கேட்டிருந்தார். 

webdunia

 
அதற்கு பதிலளித்த ஷாலு சம்மு ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல தகுதிகளை எதிர்பார்க்கின்றனர் அது எனக்கு இல்லை என்றும் கூறிவிட்டனர். மேலும் சமீபத்தில் நான் பெற்ற மோசமான விமர்சனம் என்ன தெரியுமா...?  நான் ஒரு நடிகை என்ற பெயருக்கு கூட தகுதி இல்லாதவறாம்.!  என மிகுந்த சோகத்துடன் கூறியுள்ளார் ஷாலு சம்மு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேசமணி மருத்துவமனையில் அனுமதி …புதிய காண்ட்ராக்டராக கோவாலு –நேசமணி பிராத்தனையில் அரசியல் !