Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரக் டீலர் “யுவன்” அப்போதான் பிறந்தார்! – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:57 IST)
இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளில் இளையராஜா, யுவன் பிறந்த தினத்தில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு முக்கியமான பங்கு உண்டு. இளையராஜாவின் இளையமகனான யுவன் சங்கர் ராஜா தனது டீன் ஏஜிலேயே திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கியவர்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ராம், மௌனம் பேசியதே என 2000களில் தொடங்கி யுவனின் அனைத்து ஆல்பங்களுமே ஹிட் மெட்டீரியல். இன்று வரை இளைஞர்களில் விருப்ப இசையமைப்பாளராகவும், ரசிகர்களால் செல்லமாக “ட்ரக் டீலர்” என்றும் அழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ”மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தின் இசையமைப்பு பணிகளுக்காக ஆழியாறு அணை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். பாடல் இசையமைப்பு பணிகள் போய்க் கொண்டிருந்தபோது எனது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வந்தது. அன்று நான் இசையமைத்த பாடல் ஜானி படத்தில் வரும் “சினோரிட்டா ஐ லவ் யூ” என்ற பாடல். ஹேப்பி பர்த்டே யுவன்” என வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments