Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசை உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கே இழப்பு: இளையராஜா

இசை உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கே இழப்பு: இளையராஜா
, ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (18:04 IST)
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இசை உலகிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலக உலகிற்கே ஏற்படும் இழப்பு இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார் அவர் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
‘இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீகக் குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை.
 
அவருடைய இழப்பு இசை உலகிற்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்டிபஜார் தீ விபத்தில் சிக்கிய நடிகர்! – என்ன நடந்தது?