Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

ஏ.ஆர் ரஹ்மானை மறைமுகமாக திட்டி, நடிகை ரோஹிணியிடம் எகிறிய இளையராஜா!

Advertiesment
ilayaraja
, திங்கள், 4 மார்ச் 2019 (15:23 IST)
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர். இவரது பல பாடல்கள் அவ்வளவு இனிமையாகவும், மென்மையாகவும் நம்மை கவர்ந்தாலும் இவரது மோசமான  குணம் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. சினிமாவில்  சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபக்காரராக இருக்கிறார் இளையராஜா. 


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இசைப்பணியை பாராட்டி ‘இளையராஜா 75’ விழா நடத்தப்பட்டது.  சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான நடிகர் நடிகைகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
 
அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சி பிரபல  சன் தொலைக்காட்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 
 
அதாவது, நடிகை ரோஹிணி,  இளையராஜா, இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோரை மேடையில் நிறுத்தி '' இயக்குனர் ஷங்கரிடம் நீங்களும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷனையும் பார்க்கணும் அப்டிங்குறது நிறைய பேருக்கு நெடுநாள் ஆசை '' என்று சொல்லி முடிப்பதற்குள்,  குறுக்கிட்ட இளையராஜா “இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா... ஐ  டோன்ட் லைக் திஸ் இப்படி கேட்கக்கூடாது. நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு?” என முகத்தில் அடித்தாற்போல் கேட், அந்த நொடியில் என்னசெய்வதென்று தெரியாத நடிகை ரோகினி  “இல்ல... இல்ல... அப்படி இல்ல சார்...” என கூறி சமாளித்தார். 
 
ஆனாலும், விடாத இளையராஜா இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்குற ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரைப்போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற” என்று ஏ.ஆர் ரஹ்மானை மறைமுகமாக சாடினார் இளையராஜா. 
 
பலபேர் முன்னிலையில் இளையராஜா இப்படி மோசமாக நடந்துகொண்டதால்  சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருவதை நீங்களே பாருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரித்திகாவின் மீடூ விற்கு சென்ஸார் தடை – நீதிமன்றம் செல்ல முடிவு !