Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது பிரச்சனை – மீண்டும் இணைந்த லெஜண்ட்ஸ் !

Webdunia
திங்கள், 27 மே 2019 (16:13 IST)
இளையராஜா மற்றும் எஸ்.பி.பி.க்கு இடையில் இருந்த மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

ராயல்டி தொடர்பான பிரச்சனையால் எஸ்.பி.பி மற்றும் இளையராஜாவுக்கு இடையில் மனஸ்தாபம் உருவானது.  இதற்கிடையில், பாடகர் எஸ்.பி.பி., திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.

இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பாடியுள்ளது குறித்து இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து தான் இனிமேல் இளையராஜா பாடல்களைப்  பாடமாட்டேன் என எஸ்.பி.பி தெரிவித்தார்.

இதையடுத்து சில வருடங்களாக இருவரும் இணைந்து பணிபுரியாமல் இருந்தனர். இதையடுத்து இப்போது இளையராஜாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பூந்தமல்லியில் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் ஆகியோரை கலந்துகொள்ள செய்வதற்கான முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்ததை அடுத்து இளையராஜாவும் எஸ்.பி.பியும் இன்று சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

அடுத்த கட்டுரையில்
Show comments