Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடு, மாடுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர் அவர்: பிறந்த நாள் விழாவில் இளையராஜா

, சனி, 3 ஜூன் 2017 (01:35 IST)
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று சென்னை காமராஜ் அரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த விழாவில் மாலையில் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.



 


கமல்ஹாசன் இந்த விழாவில் பேசியபோது, ''இளையராஜாவின் இசை மூலம் முகவரி கிடைத்தவன் நான். அவரை நேரில் வந்து வாழ்த்தும் பாக்கியம் கிடைத்துள்ளது. இன்னும் 300 ஆண்டுகளுக்கு இளையராஜா இசை இருக்கும். நடிக்க வாங்க என்று அவரை நீண்ட நாள்களாக அழைத்து வருகிறேன். விரைவில் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

இறுதியாக பேசிய இளையராஜா, ' 'சத்குருன்னு சொல்லிகிட்டு இருக்கவங்கலாம் சத்குரு கிடையாது. ரமண மகரிஷி ஒருவரே சத்குரு. நான் யாரையும் தவறாக பேசவில்லை. ரமண மகரிஷியின் பெருமையை குறித்துதான் பேசுகிறேன். அவர் ஆடு, மாடுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர். கமல் என் சகோதரர். இதை நான் சொல்வதற்காகவே, நேரில் வந்து வாழ்த்து சொல்லியுள்ளார் அவர். ரஜினி எனக்கு போன் செய்து 'வாழ்த்துகள் சாமி' எனக் கூறினார்', என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடைக்கு மாறும் மகிழ்மதி இளவரசி அனுஷ்கா