கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். அவர் பேசும்போது “விடுதலை முதல் பாகத்தை பார்த்துவிட்டு, இரண்டாம் பாகம் ஒரு ரூட்டில் போகுமென நினைத்தேன். ஆனால் அவர் வேறு ஒரு ரூட்டில் செல்கிறார்.
படத்தில் ராஜீவ் மேனன், சேத்தன் எல்லாம் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஆனால் நான் எந்த காட்சிகளை எல்லாம் பாராட்டினேனோ அந்தக் காட்சிகளை எல்லாம் வெற்றிமாறன் நீக்கிவிட்டார். ஆனால் அவர்தானே இயக்குனர். அவர் என்னக் காட்டவேண்டும் என நினைக்கிறாரோ அதைதான் நாம் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.