Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் இசைஞானி அல்ல, மெய்ஞானி.. இளையராஜாவுக்கு திருமாவளவன் புகழாரம்..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (18:37 IST)
இசைஞானி இளையராஜா மார்ச் 9ஆம் தேதி லண்டனில் சிம்போனி அரங்கேற்றம் செய்ய இருக்கும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. 
 
அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். 
 
"இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்" - என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது. 
 
அது-
தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல;  
தன்னை உணர்ந்துள்ள   மெய்ஞானத்தின் புலப்பாடு! 
 
அவர் இசைஞானி என்பதைவிட #மெய்ஞானி என்பதே பொருந்தும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மூக்குத்தி அம்மன் 2’ பூஜை, படப்பிடிப்பு எப்போது? பரபரப்பு தகவல்..!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ‘வாவ்’ கிளிக்ஸ்!

தங்க நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… க்யூட் போட்டோஸ்!

சூரியை வைத்து வெப் சீரிஸ் இயக்கும் விக்ரம் சுகுமாரன்!

சூரியின் ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் லப்பர் பந்து பட நடிகைக்குக் காயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments