Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய கருத்துக்கு முற்றிலும் எதிரான படத்துக்கு இளையராஜா இசையமைத்தார்… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 21 மார்ச் 2024 (07:05 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றும் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குனர் கோபி.

இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இளையராஜா பயோபிக் பட அறிமுக விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “மனுஷி படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். அது இளையராஜா அவர்களின் கருத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்து. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அதற்கு மிகச்சிறப்பாக இசையமைத்துக் கொடுத்துள்ளார் அவர். அந்த வசனம் பற்றி சொன்ன போது கூட, அதை பார்த்துக் கொள்ளலாம் எனக் கடந்துவிட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments