விஜய்யின் The GOAT படத்தில் இணையும் இளையராஜா?... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:04 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தின் தலைப்பு “The greatest of all time” என்று வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜாவுடன் இணைந்து விஜய் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் இசையமைத்துள்ள சில படங்களில் இளையராஜா பாடல்கள் பாடியுள்ளார் என்பதால் இந்த தகவல் அதிக நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments