Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது ஆண்மை இல்லாதத் தனம் – சர்ச்சையைக் கிளப்பிய இளையராஜா !

Advertiesment
இது ஆண்மை இல்லாதத் தனம் – சர்ச்சையைக் கிளப்பிய இளையராஜா !
, திங்கள், 27 மே 2019 (10:54 IST)
தற்போதைய படங்களில் தனது பழையப் பாடல்களைப் பயன்படுத்துவது குறித்து இளையராஜா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

தற்போது தமிழில் வெளியாகும் பல படங்களில் இளையராஜாவின் பழையப் பாடல்கள் ரெஃபரன்ஸாகவோ அல்லது பின்னணியிலோ வைக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் அதிகமாக இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது.

இது குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது ’இது மிகவும்  தவறான விஷயம். 80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார்.

ஆனால் இதற்குப் பதிலளிக்கும் விதமாக இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடனமாடும் பல பழையப் பாடல்களின் தொகுப்பை சுட்டிக்காட்டி இதுமட்டும் ஆண்மையில்லாத தனம் இல்லையா? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் ஹீரோ? சண்டை போட்டுகொள்ளும் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா