Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களுக்கு கோவம் இல்லையென்றால் - பர்ஸ்டே பர்ஸ்ட்ஷோ பார்ப்பேன் - சாந்தனு

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (11:59 IST)
அப்பா செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் அண்ணா என பாக்யராஜ் மகன் சாந்தனு தனது ட்விட்டரில் விஜய்யிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி உதவி இயக்குனராக வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். 
 
 'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், படத்தில் அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து 'சர்கார்' பட விவகாரம் முடிவுக்கு வந்தது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனரும் , நடிகருமான பாக்யராஜ், வருண் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. அவர் வளர்ந்து வரும் இயக்குநர். 10 வருடமாக சினிமாவில் வரவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது குறித்து வருணுக்கு 10 வருடத்திற்கு முன்னதாகவே தோன்றி இக்கதையை உருவாக்கியுள்ளார் என வருணுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். 
 
இந்நிலையில் நடிகரும், பாக்யராஜ் மகனுமான சாந்தனு,  “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன்  “இல்லை” ,  என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் .மேலும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு என் மீது கோவம் இல்லையெனில் நானும் சர்க்கார் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன் என்று கூறிய  சந்தனு, தீபாவளியை கொண்டாடுவோம் சர்க்கார் கொண்டாடுவோம் ! ” என தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments