Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஆணையிட்டால்.. எம்ஜிஆர் ஸ்டைலில் செகண்ட் லுக்! - அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 26 ஜனவரி 2025 (16:27 IST)

நடிகர் விஜய் அரசியலில் இயங்கி வரும் நிலையில் அவரது கடைசி படமும் அடுத்தடுத்து அரசியலை மையப்படுத்தியே அப்டேட்டாக வந்து குவிவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் தனது 69வது படமே கடைசி படம் என அறிவித்துள்ளார். அதனால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில் பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

இந்த படத்திற்கு ’ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று குடியரசு தினத்தில் இதன் முதல் லுக் போஸ்டர் வெளியானது. நெய்வேலி சுரங்கத்தில் விஜய் எடுத்த செல்ஃபியை ரெபரன்ஸாக கொண்டு உருவாகியிருந்த அந்த போஸ்டர் காலை முதலே வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது டபுள் ட்ரீட்டாக ஜனநாயகன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

 

 

அதில் விஜய், புரட்சி தலைவர் எம்ஜிஆர் போல சாட்டையை சுழற்றிக் கொண்டு நிற்க, நான் ஆணையிட்டால் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த படம் 2026 ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில் முழுவதும் விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு உரித்தான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments