Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதியை விமர்சித்த நாம் தமிழர் கட்சி பிரபலம்!

Advertiesment
விஜய் சேதுபதியை விமர்சித்த நாம் தமிழர் கட்சி பிரபலம்!
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
நடிகர் விஜய் சேதுபதி கொஞ்சமாவது நன்றியோடு இருக்க வேண்டும் என இடும்பாவனம் கார்த்தி தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதற்கு நாம் தமிழர் கட்சியினரின் கண்டனங்களும் ஒரு முக்கியக் காரணம். அப்போதே முத்தையா முரளிதரன் ஈழ தமிழர்களுக்கு எதிரானவர் என்று அறிவுறுத்தினார்கள். இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி ஈழத்தமிழ் போராளிகளை இழிவுபடுத்திய பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரான இடும்பாவனம் கார்த்தி ‘தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளைக் கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களைக் காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்படி முடிகிறது? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் மிருகம் பாதி.. மனிதன் பாதி! – ரிலீஸானது வெனோம் தமிழ் ட்ரெய்லர்!