'இட்லி கடை' திரைப்படம்: மாதம்பட்டி ரங்கராஜ் கதையா? படக்குழு அளித்த விளக்கம் என்ன?

Siva
வியாழன், 25 செப்டம்பர் 2025 (17:37 IST)
தனுஷ் நடித்துள்ள  'இட்லி கடை' திரைப்படம் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில், பரவிய தகவலை, படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்ட தகவலும் உண்மை இல்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.
 
'இட்லி கடை' திரைப்படத்தின் கதைக்களம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவின. குறிப்பாக, இந்தப் படம் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதனால் அவர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
 
ஆனால், படக்குழு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. "இட்லி கடை திரைப்படத்திற்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு கதை," என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வந்த செய்திகள் பொய்யானவை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
 
ஒரு சமையல் கலைஞர் குறித்து படம் எடுக்கப்பட்டால், அது மாதம்பட்டி ரங்கராஜின் கதையாகத்தான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த வதந்திகள் பரப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

கணவருக்கு ஆதரவாக பதிவிட்ட மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி!

அடுத்த கட்டுரையில்
Show comments