Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

Advertiesment
நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

Mahendran

, செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (15:40 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் நீங்கள் எனக்கு காட்டிய அன்பை இரட்டிப்பாக திருப்பி தர கடுமையாக உழைப்பேன் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
“ மதராஸி ” படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்க்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி.
 
தற்போது படப்பிடிப்பில் உள்ள “ பராசக்தி ” படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
 
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். 
 
உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!