Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நடிகர் விஜய்யுடன் நிச்சயம் இணைவேன்''-- இயக்குனர் வெற்றிமாறன்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (17:08 IST)
நடிகர்  விஜய்யுடன் நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில், இன்று  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் கேள்விக்கு வெற்றிமாறன் பதிலளித்தார்.

இதற்கிடையே, ஒரு செய்தியாளர், விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், ‘’விஜய்யும் நானும் ரொம்ப நாட்களாகவே இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். விஜய் சார் ரெடியாகத்தான் இருக்கிறார். நான் கொடுத்த கமிட்மெண்ட்களை எல்லாம் முடித்த பின்பு இதற்கான வேலை தொடங்கும், நிச்சயம் விஜய்யுடன் இணைவேன்’’ என்று கூறினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments