மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த பல வாரமாக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் நேற்று புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆடுகளம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் கிஷோர், ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், ''நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்துவிட்டு மகுடம் சூட்டும் மன்னர் நரேந்திர மோடிக்கு பராக் பராக்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாபை எதிர்க்க முடியாது. ஆணாதிக்கத்தின் சின்னம். மனுதாரரின் ஹிஜாப் தடை, ஒரு சுதந்திரமான படித்த, அதிகாரமற்ற பெண்ணாக மாறுவதைத் தடுத்து ஒரு கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றது. பெண் ஒருவரின் படிப்பால் அடுத்த தலைமுறை முழுவதும் கல்வி கற்கும். அரசாங்க புள்ளிவிவரத்தின்படி 100க்கு பதினான்கு முஸ்லீம் பெண்களே கல்வி கற்க முடிகிறது. உலகின் உயரத்திற்கு வர பல நூற்றாண்டுகளாகப் போராடியவர்களை நான்கு சுவர் குழிக்குள் தள்ளுகிறார்கள் ஜெய் பாரத் மாதா என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரியங்கா காந்தி: ''மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது. மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை. அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது ''என்றார்.
ராகுல் காந்தி: ''முடிசூடும் விழா முடிந்தது; மக்களின் குரல்களின் நசுக்கும் பணி தொடங்கியது! ''என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.