Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுவரை நடிப்பேன் - பழம்பெரும் நடிகை!

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (19:08 IST)
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என்று பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா கூறியுள்ளார்.


 
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என போற்றப்படும் நடிகை கே.ஆர்.விஜயா  தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பழமொழிப் படங்களில் சுமார் 400 திரைப்படங்களில் நடித்து இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
 
சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
சாய் இளவரசன் இயக்கத்தில் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா கூறியதாவது, நான்  சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இதுவரை பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. 
 
என் இளமைக்காலத்தில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்ததால்  அப்போது எனக்கு கிடைத்த புகழை எண்ணி சந்தோஷப்படக்கூட நேரமில்லை இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

என் கணவர் உயிரோடு இருக்கும்போது  உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இரு.  யாரை பற்றியும் கவலைப்படாதே என எனக்கு தைரியம்  கூறினார். அதுமட்டுமின்றி  எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள். உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோ‌ஷமா இருன்னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. ஆதலால் என் உடல் ஒத்துழைக்கும் வரை நான் நடிப்பேன் இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments