Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன்- செல்வராகவன் உருக்கம்!

நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன்- செல்வராகவன் உருக்கம்!
, சனி, 1 டிசம்பர் 2018 (11:07 IST)
இயக்குனர் செல்வராகவன் தனது ரசிகர்கள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 
காதல்கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என ஹிட் படங்களை கொடுத்த செல்வராகவனுக்கு  தமிழ் சினிமாவில் அவருக்கென  தனியிடம் இருக்கிறது. 
 
தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது என்.ஜி.கே படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என 2 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். 
 
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் தான் தனது நண்பர்கள் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், உருக்கமான பதிவொன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் செல்வாராகவன். அதில், "கொடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால்  அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்!" எனத் தெரிவித்திருக்கிறார். 
 
இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாகவது, " கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான். இருவேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என பலர் சொன்னபோது ,  எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் . அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
செல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்துடன் அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் , அவர் ஏன் தற்போது இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளார் என்ற குழப்பம்  ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 முதல் நாள் வசூலே இதனை கோடியா! - கொண்டாடிய விநியோகிஸ்தர்கள்