‘விவேகம்’ படத்தின் டீஸர் லீக்காக தான் காரணமில்லை என அந்தப் படத்தின் எடிட்டரான ரூபன் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் டீஸர், கடந்த 11ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு, சத்ய ஜோதி ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ யூ டியூபில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே யூ டியூபில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட டீஸர், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் காட்டுத்தீயாய் பரவியது. இதனால், படக்குழுவினரும், அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
டீஸர் லீக்காக, படத்தின் எடிட்டர் ரூபன் காரணமாக இருக்கலாம் என சிலர் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த ரூபன், “நம்பகமான சிலரிடம் மட்டுமே யூ டியூபின் அக்சஸ் இருக்கிறது. லீக்கான டீஸரில் வீடியோ குவாலிட்டி சரியாக இல்லை. அத்துடன், வாய்ஸும் சரியாக ஸிங்க் ஆகவில்லை. என்னிடம் இருந்து லீக்காகி இருந்தால், இப்படி இருந்திருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.