Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டேன் - விஜய்யின் அம்மா தகவல்!!

Advertiesment
எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டேன் - விஜய்யின் அம்மா தகவல்!!
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (19:02 IST)
நேற்று நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இக்கட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாக விஜய்யின்  அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு விஜய் மறுப்புத் தெரிவித்து என் பெயரைப் பயன்படுத்தி கட்சி நடவடிக்கைகள் இருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்யின் தந்தை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

எனக்குத் தேவைப்பட்டதால் நான் கட்சி தொடங்கியிருக்கிறேன்…நானும் விஜய்யும் கருத்துவேறுபாட்டுடன் இல்லை; 1993 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்பாக தொடங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் நலனுக்காகவும் அவர்களை உற்சாகத்துக்காவும்  இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளது எல்லாம் நன்மைக்காகவே என்று அவர் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர் இதுகுறித்து மேலும் கேள்விகள் எழுப்பியதற்கு தனியாக வாங்கள் பதில் சொல்லுகிறேன் என்று கூறினார்.
webdunia

இந்நிலையில் , விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை அதிலிருந்து தான் விலகி விட்டதாக விஜய்யின் தாயும் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரழிவுக்குப் பிந்தைய உலகம்… ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம்!