Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியா கொடுத்த முத்தமும், நான் திருப்பி கொடுத்த முத்தமும்: தவறை ஒப்புக்கொண்ட ஆரவ்

Advertiesment
ஓவியா கொடுத்த முத்தமும், நான் திருப்பி கொடுத்த முத்தமும்: தவறை ஒப்புக்கொண்ட ஆரவ்
, ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (22:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் அனைத்து பங்கேற்பாளர்களையும் தனித்தனியே அழைத்து ஓவியா வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆரவ்வை அவர் கேட்டபோது, ஓவியா உங்களிடம் 'நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடுங்கள்' என்று கூறினாரே அதை கொடுத்தீர்களா? என்று கேட்க, அதற்கு ஆரவ் முதலில் இல்லை என்று கூறினார்.



 
 
ஆனால் கமல் திரும்ப திரும்ப அழுத்தி கேட்டவுடன் ஆம், கொடுத்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொண்டார். அப்படி அவர் கொடுத்ததாக ஒப்புக்கொண்டது முத்தம். ஆம், ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தேன் என்பதை ஒப்புக்கொண்டார்./
 
பிக்பாஸ் வீட்டில் 'அப்ப எனக்கு ஏன் முத்தம் கொடுத்தாய் என்று ஓவியா கேட்டபோது, 'நான் முத்தம் கொடுக்கவில்லை, உனக்கு யார் முத்தம் கொடுத்தார் என்று எனக்கு தெரியாது' என்று கூறினார். ஆனால் தற்போது ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் அதை மருத்துவ முத்தம் என்றும், ஓவியாவை தேற்றுவதற்காக கொடுத்த முத்தம் என்றும் அதில் காதல் இல்லை என்றும் கூறியுள்ளார். ஓவியாவின் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு இந்த துரோகமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி