விஜய்க்காக கதை எழுத மாட்டேன், என் கதைக்கு விஜய் வரவேண்டும்: பிரபல இயக்குனர்

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (09:45 IST)
தளபதி விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் போதும், அவருக்கேற்ற மாஸ் கதை எழுத தயார் என்றும், ரசிகர்களை குஷிப்படுத்தும் மாஸ் காட்சிகள் அமைக்கவும், பஞ்ச் டயலாக்குகள் எழுதவும் தயார் என்று பல இயக்குனர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். 
 
இந்த நிலையில் என்னுடைய கதைக்குத்தான் விஜய் பொருத்தமாக இருக்க வேண்டுமே தவிர விஜய்க்காக ஒரு மாஸ் கதையை என்னால் எழுத முடியாது என்று பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த ’யோஹான் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் விஜய் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் எழுதிய மாஸ் கதைக்கு விஜய் பொருத்தமாக இருக்க வேண்டுமே தவிர அவருக்காக நான் வலுக்கட்டாயமாக ஒரு மாஸ் கதை எழுதுவதில் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை விஜய்க்கு என்னால் கதை எழுத முடியவில்லை என்றும் இனிமேல் எழுத வாய்ப்பு இருந்தால்
கண்டிப்பாக எழுதுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் விஜய்க்காக வலுக்கட்டாயமாக கதை எழுத முடியாது என்று கௌதம் மேனன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

”நீ தவறான படம் செய்ய எந்தக் காரணமும் இல்லை…” –மம்மூட்டியின் அட்வைஸைப் பகிர்ந்த துல்கர்!

’ஒடிசே’ படமாக்களுக்கு 20 லட்சம் அடி பில்ம் ரோல்களைப் பயன்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்…!

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments