சினிமாத்துறை தனக்கு கடவுள் போன்றது என்றும், தனது சினிமா வாழ்வில் இதுவரை எந்தவிதமான பாலியல் தொல்லைகளையும் தான் சந்தித்ததில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியில் தனியார் செல்போன் கடை திறப்பு விழா விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா, கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் கடைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றிய அவர், சிறிது நேரம் பேசியது மட்டுமல்லாமல் ரசிகர்களோடு உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா துறையிலும் உள்ளது போல், சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவும், இதனால் ஒட்டுமொத்த துறையின் பெயரும் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நடிகை சமந்தா கூறினார்.
இதனால் சினிமா உலகில் நிலவி வரும் பாலியல் குற்றங்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாக நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.
ஆனால் சினிமாவில் தனக்கு எந்தவிதமான குறையும் இல்லை எனவும், கடந்த 10 ஆண்டு சினிமா வாழ்வில் இதுவரை எந்த வித பாலியல் பிரச்சனையும் ஏற்பட்டதில்லைஎனவும் . சினிமா துறை என்பது எனக்கு கடவுளுக்கு சமமானது.” எனக் கூறினார்.
மேலும் முன்னனி நடிகர் அரசியலுக்கு வருவதை பற்றிய கேள்வி கேட்டப்போது, அரசியலுக்கு வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, சினிமா துறையில் எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய பங்கு என்றும் குறிப்பிட்டார்.குறித்து நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.