Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன்னை எல்லாம் பார்க்க வரமுடியாது; காயத்ரியின் அழைப்புக்கு பதில் அளித்த நெட்டிசன்கள்

Advertiesment
உன்னை எல்லாம் பார்க்க வரமுடியாது; காயத்ரியின் அழைப்புக்கு பதில் அளித்த நெட்டிசன்கள்
, வியாழன், 9 நவம்பர் 2017 (16:14 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைப்பெற்றது. அதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், இறுதியில் ஹரிஷ், சிநேகன், ஆரவ் மூன்று பேரில், ஆரவ் வெற்றியாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 
தமிழில் அடுத்த பிக்பாஸ் சீசன் எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், அதுபற்றிய அறிவிப்பு  எதுவும் இதுவரை வரவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து விளம்பரம், சினிமா என பிஸியாகிவிட்டனர். அடிக்கடி பார்ட்டி கொடுத்தும், ஹோட்டல்களில் கூடியும் கொண்டாடி வருகின்றனர். அதை பற்றிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவதை காணமுடிகிறது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளான காயத்ரி, தற்போது ட்விட்டரில் ஆக்டிவ்வாக உள்ளார். இதனை தொடர்ந்து ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார். வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை  நுங்கம்பாக்கத்தில் புதில் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளதாகவும், அதில் என்னுடன் மற்ற பிக்பாஸ் ஹவுஸ்  மேட்ஸையும் நீங்கள் சந்திக்கலாம் என ட்வீட் செய்துள்ளார்.
 
இந்த திறப்பு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் நெட்டிசன்கள் அந்த  நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் காயத்ரியை கலாய்த்து ட்வீட் செய்து  வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்ப்புதானே விடுங்க போகட்டும்; படுக்கைக்கு நோ சொல்லுங்க; தனுஷ் தோழி