Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் கடவுளாக நம்புகிற இவங்க நினைச்சா தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டடிலாம்: விஷால்

Advertiesment
நான் கடவுளாக நம்புகிற இவங்க நினைச்சா தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டடிலாம்: விஷால்
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:49 IST)
தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்ட தமிழக அரசால் தான் முடியும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால், தமிழக முதல்வரைச் சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில். ''கடந்த 2, 3-ம் தேதிகளில் இளையராஜாவுக்கு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. விழாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க முதல்வரைச் சந்தித்தேன்.
 
சுமார் 25,000 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. இதற்கு நன்றிகூறிக் கடிதம் அளித்தோம். இளையராஜாவின் 1000 படங்கள் குறித்த புத்தகம் ஒன்றையும் அளித்தோம்.
 
ஏற்கெனவே அரசிடம் அளித்த கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்தோம். குறிப்பாக தமிழ்மொழிப் படங்களின் வெளியீட்டின்போது மற்ற மொழிப் படங்கள் வெளியாகின்றன. அப்போது தமிழ்ப் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
 
பார்த்திபனின் முயற்சியால்தான் ஒரே மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இளையராஜா பாட முடிந்தது. அவர் எடுத்த முயற்சியால்தான் இது சாத்தியமானது. ஜூலை முதல் வாரத்தில் நடிகர் சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா இருக்கும். தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டுமே தடுக்க முடியும். நான் கடவுளாக நம்புகிற தமிழக அரசு நினைத்தால் இது நடக்கும்'' இவ்வாறு விஷால் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கலில் பாலா படம் … -காதலர் தினப் போட்டியில் இருந்து ஒதுங்கிய வர்மா