ரஜினி தற்போது ரன்ஜித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூம குரேஷி நடிக்கிறார்.
பாலிவுட் நடிகை ஹூம குரேஷியின் கதாபாத்திரம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஹூம குரேஷி.
முதலில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
கபாலியை விட காலாவில் அரசியல் சார்ந்த காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் அனைத்து வசன காட்சிகளும் ரஜினியின் அனுமதியுடன் தான் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.