Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் வேதா ரீமேக்… அமீர்கான் விலகியதால் இவரா?

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (10:22 IST)
விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிக் கொன்ரு வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 8 மாதமாக எந்த பணிகளும் நடக்கவில்லை. அமீர்கான் இப்போது லால் சிங் லட்டா படப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து இப்போது அமீர்கான் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்துக்காக 3 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர் புஷ்கர் காயத்ரி அதிர்ச்சியில் உள்ளனர்.

அமீர்கான் விலகியதால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹ்ருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் நடிக்க சம்மதித்துள்ளாராம். மாதவன் கதாபாத்திரத்தில் முன்பே பேசப்பட்டது போல சாயிப் அலிகானே நடிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விவாகரத்து ஆனாலும் தொடரும் ஜி வி பிரகாஷ் & சைந்தவியின் இசைப் பயணம்… அவரே வெளியிட்ட அறிவிப்பு!

நான் நாத்திகனாக இருப்பதால் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லையா?... சத்யராஜ் பதில்!

தமிழ் சினிமாவின் ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கிறதா?

பிரிவதில் உறுதியாக இருக்கின்றோம்: நீதிமன்றத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா..!

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments