Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அவதார்’’ படத்தின் 4 பாகங்களுக்கான ’’பட்ஜெட்’’ எவ்வளவு தெரியுமா ?

Webdunia
புதன், 13 மே 2020 (21:25 IST)
கொரோனா பாதிப்பால் திரைத்துறையே ஸ்தம்பித்துள்ள நிலையிலும்அவதார் 2’ படத்தை சொன்ன தேதியில் வெளியிட தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புகளால் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த அவதார் 2 படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதான கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்டவற்றிற்கு பணியாளர்களை வீட்டிலிருந்தே தயார் செய்யுமாறு கூறியுள்ளாராம் ஜேம்ஸ் கேமரூன்.

இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ”உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடக்கம் கண்டுள்ளன. நியூஸிலாந்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அவதார் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் எனவும், இப்படத்தின் மூன்றாம் பாகம் 2023 ஆம் ஆண்டு,  டிசம்பரில் வெளியாகும், 5 ஆம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் ’என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  இந்த  பாகங்களை படமாக எடுக்க 1 பில்லியன் டாலர் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த தொகை நம் இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments