Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வொர்க் அவுட் ஆகிறதா கவுண்டமணியின் ‘counter’…ஒத்த ஓட்டு முத்தையா டிரைலர் எப்படி?

vinoth
சனி, 8 பிப்ரவரி 2025 (08:17 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்தது எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற திரைப்படம். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். விரைவில் ரிலீஸாகவுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் வாதியான முத்தையா எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதைக்களம் என தெரிகிறது. டிரைலரில் ஆங்காங்கே தமிழக அரசியல் சம்பவங்கள் நக்கலடிக்கப்பட்டுள்ளன. கவுண்டமணியோடு, யோகி பாபு, சிங்கமுத்து,மொட்ட ராஜேந்திரன் என பெரும் காமெடிப் பட்டாளமே இருந்தாலும் பெரிதாக சிரிப்பை வரவழைக்கக் கூடிய வசனங்கள் டிரைலரில் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடர்ந்து இத்தனைத் தோல்விப் படங்கள் கொடுப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… சுசீந்திரன் ஒப்புதல்!

'விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி? ஆச்சரியமான தகவல்..!

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments