Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ட டிரைலருக்கு விஸ்வாசம் பதிலடி கொடுத்தது எப்படி ?

பேட்ட டிரைலருக்கு விஸ்வாசம் பதிலடி கொடுத்தது எப்படி ?
, திங்கள், 7 ஜனவரி 2019 (09:09 IST)
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களும் ஒரே நாளில் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போர் இரு படங்களின் டிரைலர்களும் ரிலிஸானதை அடுத்து உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

2018 டிசம்பர்  28ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் முதலில் வெளியானது. அதில் ரஜினிப் பேசிய சில வசனங்கள் அஜித் மற்றும் விஸ்வாசம் படத்தைக் கேலி செய்வது போல அமைந்ததால் டிரைலர் வைரலாக பரவியது. அதையடுத்து கோபத்தோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது விஸ்வாசம் டிரைலர். பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்குக் கவுண்ட்டர் கொடுப்பது போல அமைந்தன அஜித் பேசிய வசனங்கள்.

அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அஜித் ரசிகர்கள் பேட்ட படத்தையும் ரஜினியையும் வைத்து செய்தனர். மேலும் பேட்ட டிரைலர விட விஸ்வாசம் டிரைலர் மக்களிடம் அதிக வரவேற்பையும் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அதனால் பேட்ட படக்குழு சோகத்தில் ஆழ்ந்தது.

பேட்ட டிரைலருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டே நாட்களில் எப்படி விஸ்வாசம் குழுவினர் டிரைலரை தயார் செய்தனர் என விசாரணையில் இறங்கிய போது, பேட்ட டீமுக்கு நெருக்கமான ஒருவர்ட் முன்னதாகவே பேட்ட டிரைலரில் வரும் வசனங்களை விஸ்வாசம் டீமோடு பகிர்ந்துகொண்டதாகவும் அதன் மூலமே பதிலடிக் கொடுக்கும் டிரைலரை அவர்கள் உருவாக்கியதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் பரவிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கிரிக்கெட் படத்தில் ஜீவா