Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரகாஷ் ராஜ் விமர்சனத்துக்குப் பதிலளித்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (09:00 IST)
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஆதரவாகப் பேசினர். மேலும் இந்த படம் இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி பிரிமீயர் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடியில் பிரிமீயர் ஆனது.

இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் பரிந்துரக்கு செல்லும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளாவில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் பற்றி பேசிய பிரகாஷ் ராஜ் “இந்த படத்தின் இயக்குனர் ஆஸ்கர் ஏன் கிடைக்கவில்லை என கேட்கிறார். அவருக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. ஏனென்றால் அது முட்டாள்தனமான படம்” எனக் கூறியிருந்தார்.

பிரகாஷ்ராஜின் அந்த கமெண்ட்டுக்கு பதிலளித்த விவேக் “ஒரு சிறிய படம் அர்பன் நக்சல்களுக்கு ஒரு வருடமாக தூக்கத்தைக் கெடுத்துள்ளது. அதில் ஒருவர் இந்த படத்தின் பார்வையாளர்களைக் குரைக்கும் நாய் என்கிறார். இருள் ராஜ் பாஸ்கர் எனக்குக் கிடைக்காது. ஏனென்றால் அது எப்போதும் உங்களுடையதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments