Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள திரையுலகிலும் பாலியல் தொல்லை: நடிகை ஹனிரோஸ் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (09:57 IST)
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு பின்னர் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்ல தொடங்கினர்.
 
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ், 'மலையாள திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் இருந்ததாகவும், இந்த பிரச்சனையை தானும் சந்திக்க நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆரம்ப காலத்தில் தன்னிடம் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் பேசியவர்கள் உண்டு என்றும், தன்னை பிரைன்வாஷ் செய்து பாலியல் தொல்லைகளை சிலர் கொடுக்க முயன்றதாகவும், ஆனால், தான் மனதளவில் உறுதியாக இருந்ததால் தனக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றும் ஹனிரோஸ் கூறியுள்ளார். என்னை பொருத்தவரை நாம் உறுதியாக இருந்தால் எந்த பாலியல் தொல்லையும் நம்மை நெருங்க முடியாது என்பது தனது நம்பிக்கை என்றும் கூறிய ஹனிரோஸ், படப்பிடிப்பின்போது என் பெற்றோர் உடன் இருந்தது எனக்குப் பாதுகாப்பாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹனிரோஸ் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்