Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரன் சண்டைக் காட்சிக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (10:10 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களை சன் தொலைக்காட்சி கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது பாண்டிச்சேரியில் படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க, ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யானிக் பென் இந்த படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments