Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெசவாளர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி!

நெசவாளர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி!
, சனி, 25 செப்டம்பர் 2021 (10:56 IST)
நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இயக்கியுள்ள திரைப்படம் சிவக்குமாரின் சபதம்.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். அதையடுத்து அவர் இப்போது அன்பறிவு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அதையடுத்து ஆதி நடிக்கும் படத்தையும் அதே நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக சிவக்குமாரின் சபதம் என்று பெயர் வைத்துள்ளாராம் ஆதி. ஆதியின் படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஹிப் ஹாப் ஆதி ‘இந்த படத்தில் காஞ்சிபுரம் பகுதியில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார். ஆனால் டிரைலரிலோ படத்தின் பர்மோஷன்களிலோ அதற்கான தடயத்தையே காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது தனுஷின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு!