Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பிச்சிட்டாங்கோ...கண்டிப்பா இந்த படமும் ஹிட்தான்....

Advertiesment
ஆரம்பிச்சிட்டாங்கோ...கண்டிப்பா இந்த படமும் ஹிட்தான்....
, வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (18:00 IST)
நாச்சியார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் தொடர்பாக பாலா, ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாநகர காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள நாச்சியார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜோதிகா பேசிய வசனம் தற்போது தீயாக வெடித்துள்ளது.
 
அதில், கோயிலாக இருந்தாலும் சரி குப்பை மேடாக இருந்தாலும் சரி எங்களுக்கு ஒன்றுதான் என்று ஜோதிகா பேசுவார். இந்த வசனத்திற்கு முன் அனைத்து மதங்களின் பாடல்களும் ஒலிக்கும் காட்சிகள் இடம்பெறும். 
 
அப்போதே இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி சார்ப்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் அளித்த புகாரில் ஜோதிகா பேசிய வசனத்தை குறிப்பிட்டு, இதன்மூலம் தெள்ளத்தெளிவாக தெரிவது என்னவென்றால் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்துக்கள் மதத்தை புண்படுத்தும் விதமாகவும் வகையிலும் இந்த வசனம் அமைந்துள்ளது. 
 
மேலும் இஸ்லாமிய மதத்தை சார்ந்த நடிகை ஜோதிகா மத கலவரத்தை தூண்டும் எண்ணத்தில் பேசியுள்ளார். எனவே பாலா, ஜோதிகா ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய இரண்டு பேர்...