நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு 2 உயரிய விருதுகள் மெல்போர்னில் நடைபெற்ற விழாவில் IFFMelb -ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.
அத்துடன் இப்படம் இந்தியாவில் அதிகப்பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையும் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்குத் தகுதி பெற்ற 300 க்கும் மேற்பட்ட படங்களில் சூரரைப் போற்று படமும் நுழைந்து சாதனை படைத்தது.
மேலும், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு சிறந்த படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் சுமார் 100 படங்கள் திரையிடப்பட்டத்தில் சூரரைப் போற்று படமே சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று படத்தில் என்னை மாறாவாக இயக்கிய இயக்குநர் சுதா கொங்கராவுக்கும், இப்படத்தை தயாரிக்க எனது 2டி நிறுவனத்தை நம்பியதற்கும், இப்படத்தில் பணிபுரிந்தோருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.