Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்க மறுக்கும் அடல்ட் காமெடி குழு: அடுத்த பட டைட்டில் 'தண்ணி வரல்ல'

Webdunia
புதன், 9 மே 2018 (06:45 IST)
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களை கொடுத்த கவுதம் கார்த்திக் மற்றும் சந்தோஷ் ஜெயகுமார் குழு மூன்றாவதாகவும் ஒரு அடல்ட் காமெடி படத்தை உருவாக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'தண்ணி வரல்ல' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த வாரம் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் படக்குழுவினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அதே பாணியில் அடல்ட் காமெடி படத்தை உருவாக்க இந்த குழு திட்டமிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
இருப்பினும் இளைஞர்களின் பேராதரவு இந்த படக்குழுவினர்களுக்கு இருப்பதால் ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் என்று கூறப்படுகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணி வரல்ல என்று தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் இந்த படக்குழுவினர்கள் எந்த தண்ணியை பற்றி படமெடுக்கின்றார்கள் என்பதை படம் ரிலீசாகும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments