எந்திரன் கதை திருட்டு வழக்கில் இயக்குநர் சங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறானும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து வாய்தா கொடுத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் என்னுடையது என்றும் அந்த கதையைத் டைரக்டர் சங்கர் திருடிவிட்டார் என்றும் கவிஞரும் மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்து 6 ஆண்டுகள் ஆகப்போகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோதெல்லாம், தமிழ்நாடன் ஆஜராகியும், சங்கர் தரப்பு வாய்தா மேல் வாய்தாவாக வாங்கிகொண்டே இருந்தது.
இந்நிலையில், இன்று [அக். 27] மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த எழுத்தாளரை டைரக்டர் சங்கர் தரப்பு, இன்று குறுக்கு விசாரணை செய்யவேண்டும். ஆனால் இன்றும் டைரக்டர் சங்கர் தரப்பு வாய்தா கேட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர் தரப்பு, ’டைரக்டர் சங்கர் மட்டும்தான் உலகத்திலேயே பிஸியா? எல்லோரும் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பவர்கள்தான். எங்கள் தரப்பை எதற்கு தொடர்ந்து காத்திருக்கவைக்கிறீர்கள்? இந்தபோக்கை தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தது.
அதற்கு இயக்குநர் சங்கர் தரப்பு, ’அடுத்தமுறை கண்டிப்பாக வழக்கை எதிர்கொள்வோம் என்று கேட்டுக்கொண்டதால், வழக்கை நீதிமன்றம் வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.