சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். முதல் படம் மிகப்பெரும் விமர்சனத்தை பெற்று அவரின் சினிமா கெரியருக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய ஹரிஷ் கல்யாண் மாடலிங் செய்து வந்தார். பொறியாளன் படத்தில் ஹீரோவாக நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆனார்.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். இதனிடையே நர்மதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அப்போது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.