Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஓமணப்பேண்ணே… முன்னணி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:00 IST)
நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் ரிலிஸ் ஓடிடியில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டாவைக் கவனிக்க வைத்த திரைப்படம் பெள்ளி சூப்ளு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உடனே அதன் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கினார்.

தன்னுடைய தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின்னர் இப்போது அதே படத்தைதான் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் ரிலிஸாகாமல் இருந்தது. இந்நிலையியில் ஓடிடி வெளியீடு தொடர்பாக ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு. அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments