Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி தயாரித்த முதல் தமிழ் படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Advertiesment
எல்ஜிஎம்
, செவ்வாய், 27 ஜூன் 2023 (08:34 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் படமாக தமிழ்ப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கலகலப்பான காதல் படமாக உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் ரிலீஸானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் ரிலீஸ் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும், அதில் சிறப்பு விருந்தினராக தோனி கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி& நலன் இணையும் படத்தின் டைட்டிலில் எம் ஜி ஆர் ரெஃபரன்ஸ்!