Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (08:04 IST)
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக ஹரிஷ் கல்யாண் உருவாகி வருகிறார். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்.

மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்களாகி தற்போது அவரை நிலையான மார்க்கெட் கொண்ட நடிகராக ஆக்கியுள்ளன.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்து 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை லிஃப்ட் படத்தை இயக்கிய வினீத் வரபிரசாத் இயக்கி தயாரிக்க உள்ளாராம். பேன் இந்தியா படமாக உருவாகும் இதில் மலையாள நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments