Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி படத்தை முடித்துவிட்டு வாருங்கள்! பிரபல நடிகரை வழியனுப்பி வைத்த முருகதாஸ்

தளபதி படத்தை முடித்துவிட்டு வாருங்கள்! பிரபல நடிகரை வழியனுப்பி வைத்த முருகதாஸ்
, புதன், 10 மே 2017 (01:09 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய், காஜல் அகர்வால், சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் தற்போது முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.



 


அவர்தான் பிரபல மலையாள நடிகர்  ஹரீஷ் பெராடி. இவர் ஏற்கனவே தமிழில் 'ஆயிரத்தில் ஒருவன்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர். மேலும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் 'தளபதி 61' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க ஹரிஷூக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் 'ஸ்பைடர்' படப்பிடிப்பில் இருந்ததால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்ததாம், உடனே முருகதாஸ் அவரிடம் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சியை பிறகு எடுத்து கொள்கிறேன், தளபதி படத்தை முடித்துவிட்டு வாருங்கள்' என்று சந்தோஷமாக அனுப்பி வைத்தாராம். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்த ஹரீஷ், 'தளபதி 61' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐரோப்பா கிளம்பிவிட்டார்'

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த விஷயத்தை எப்படி நீ கேட்கலாம்? பத்திரிகையாளரிடம் மல்லுக்கட்டிய கள்ளக்காதல் நடிகை