’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 27 மே 2025 (17:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதால், அந்த படத்தின் முக்கிய காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அதனால் அந்த படம் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பா என்ற படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள ஒரு கிராபிக்ஸ் நிறுவனத்திலிருந்து தான் இந்த ஹார்ட் டிஸ்க் கொரியர் மூலம் அனுப்பப்பட்டதாகவும், இந்த கொரியரை ரகு என்பவர் பெற்று, அதை சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஆனால் தற்போது ரகு, சரிதா ஆகிய இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
திட்டமிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் தான் யாரோ ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றுள்ளனர் என்று படக்குழுவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments