பொதுவாகக் கிரிக்கெட் வீரர்கள் யாரும் சினிமாவில் நுழைந்து பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆனால் இதை மாற்றியுள்ளார். பிரப்ல கிரிக்கெட் வீர்ரர் ஹர்பஜன் சிங்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் மிக முக்கியமானவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணிக்காக விளையாடி 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் இந்தாண்டு வேறு அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் போக சினிமாவில் நடித்துவரும் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம்நாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இருவரும் இயக்கித் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தில் அர்ஜூன் காமெடி நடிகர் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் சண்டைக் காட்சிகளில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்து அசத்தியுள்ளார் ஹர்பஜன் சிங். அதனால் அவரைக் கொண்டாடி வருகின்றார்கள் ரசிகர்கள். மேலும் இப்படம் ஹிட் ஆகும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்