Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (11:51 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் அவரின் கடைசி ஆண்டுகளில் அவருக்கு அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால்  ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்து தற்போது கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடையக் கிரிக்கெட் வாழ்வில் தான் மாற்ற விரும்பும் விஷயம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “என் கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னோக்கி சென்று நான் எதையாவது மாற்ற விரும்புகிறேன் என்றால் ஐபிஎல் தொடரில் நான் ஸ்ரீசாந்துடன் மோதிய சம்பவத்தைதான். அதற்காக நான் 200 முறைக்கு மேல் மன்னிப்புக் கேட்டிருப்பேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் என்னிடம் “நான் உங்களுடன் பேசமாட்டேன். நீங்கள் தானே எங்கள் அப்பாவை அடித்தது” என்றாள். அது என் மனதை நொறுக்கிவிட்டது” என வருத்தம் தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments