Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (07:34 IST)
தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கேரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்துப் படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, சத்யராஜ் மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஜூலை 24 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் வாங்கிய முந்தையக் கடன்களுக்காக தெலங்கானா பிலிம் சேம்பரில் ஏசியன் எண்டர்பிரைசஸ் & மகாலட்சுமி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் புகாரளித்துள்ளன. இதனால் படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments